ராயக்கோட்டை அருகே வாகனம் மோதி டிரைவர் பலி

ராயக்கோட்டை அருகே வாகனம் மோதி டிரைவர் பலியானார்.

Update: 2022-04-08 06:24 GMT
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருேக உள்ள ஒடையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராஜ். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 33),  டிரைவர். இவருடைய மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரகாசை, அவருடைய மனைவி பிரிந்து அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பிரகாஷ் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலைக்கடன் கழிப்பதற்கு ஊருக்குள் இருந்து பிரகாஷ் சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து அவருடைய தந்தை திம்மராஜ், ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்