வெள்ளக்குட்டையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

வெள்ளக்குட்டையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-08 06:16 GMT
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வெள்ளக்குட்டை காமராஜ் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியில் அரை யூனிட் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணலை கடத்திய சிங்காரப்பேட்டையை சேர்ந்த பெருமாள் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்