பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2022-04-08 04:47 GMT
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அரியலூர் தாலுகாவில் பொட்டவெளி கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் இருகையூர் கிராமத்திலும், செந்துறை தாலுகாவில் ஆனந்தவாடி கிராமத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் ஓலையூர் கிராமத்திலும் கூட்டம் நடைபெறவுள்ளது. அரியலூர் தாலுகாவிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளாரும், உடையார்பாளையம் தாலுகாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரும், செந்துறை தாலுகாவிற்கு பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளரும், ஆண்டிமடம் தாலுகாவிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை தொடர்பான குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்