திருச்செங்கோட்டில், சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில், சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-08 04:47 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் நகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 8-வது வார்டு நகராட்சி உறுப்பினர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில இளைஞரணி பொது செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபு, ராமச்சந்திரன், செந்தில்குமார் அய்யப்பன், நாகராஜன், ரஜினிகாந்த், கார்த்திகேயன், தீபா என்கிற தமிழரசி சேகர் சந்திரமோகன் மற்றும் ஒன்றிய இளைஞரணி ரஞ்சித் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதற்கிடையே நேற்று நடந்த நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு சொத்து வரி உயர்த்தும் தீர்மானத்திற்கு எதிராக 8-வது வார்டு உறுப்பினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்