மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-04-07 22:59 GMT
சமயபுரம்:
சமயபுரம் அருகே உள்ள மேலவாளாடி தெற்கு சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன்(வயது 45). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மேலவாளாடி கடைவீதிக்கு வந்து விட்டு பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த பெரியண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எசனகோரை பகுதியைச் சேர்ந்த பார்த்திபனின் மகன் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்