பெண் மர்மச்சாவு
தாயில்பட்டி அருகே பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 60). இவருடைய அக்கா மகன் முருகன். இவரின் பராமரிப்பில் வேலம்மாள் வசித்து வந்தார். வேலம்மாள் வீட்டு திண்ணையில் உறங்குவது வழக்கம். அதேபோல திண்ணையில் தூங்கி கொண்டு இருந்தார். உடல் அசதி காரணமாக நீண்ட நேரம் தூங்குவதாக நினைத்து முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். நீண்ட நேரமாக அவர் தூங்கி கொண்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அருேக சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முருகன் இயற்கை மரணம் என கருதி வேலம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அப்போது வேலம்மாள் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலம்மாள் உடலை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேலம்மாள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.