52 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

காரியாபட்டி அருகே 52 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-07 21:31 GMT
விருதுநகர், 
காரியாபட்டி அருகே ஆவியூரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்த போது அதில் 52 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு மூடையிலும் தலா 45 கிலோ ரேஷன் அரிசி இருந்த நிலையில் மொத்தம் 2,340 கிலோ ரேஷன்அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேனை ஓட்டி வந்த வேன் உரிமையாளர் மதுரையை சேர்ந்த மதன்குமார் (வயது 29), அரிசி வாங்கியவர் மதுரையை சேர்ந்த ராஜ கணேஷ் மற்றும் ரேஷன் அரிசியை விற்ற அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரபா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதன்குமாரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் உணவுப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்