ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களில் அரசின் தலையீடு இல்லை - மந்திரி சுதாகர் பேட்டி

ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களில் அரசின் தலையீடு இல்லை என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-07 20:50 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

  மாநிலத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப், ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்பாடு விவகாரங்களில் அரசின் தலையீடு இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை. ஹிஜாப், ஹலால் இறைச்சி உண்ணுதல், விற்பனை செய்தல் விவகாரங்களில் அரசின் தலையீடு எதுவும் இல்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு ஒரு குறிப்பிட்ட மதம், சமுதாயத்திற்கு சேர்ந்தது இல்லை. அனைத்து மதத்தையும் இந்த அரசு சமமாகவும், கவுரவமாகவும் நினைக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கு தனி கவுரவம் கொடுக்கப்படுகிறது.

  ஹலால் இறைச்சி விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்ற விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த விவகாரத்தில அரசின் தலையீடு சிறிதளவும் இல்லை. தனிப்பட்ட மதத்திற்கு பின்னால் இந்த அரசு இல்லை. ஒரு மதத்தின் சம்பிரதாயங்களுக்கும், சடங்குகள், பிற நடைமுறைகளுக்கு இந்த அரசு மதிப்பு கொடுத்து வருகிறது. சட்டத்திலும் அதற்கு இடம் உள்ளது.
  இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்