காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நூதன போராட்டம் நடத்தியது.;
வாழப்பாடி:-
வாழப்பாடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைத்தும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நூதன போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில துணைத் தலைவர் ராம.சுகந்தன் தலைமை தாங்கினார். இதில் சேலம் கிழக்கு மாவட்ட துணை தலைவர் முனுசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் தாண்டானூர் பழனி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சேலம் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.