மாணவியை கடத்தி பலாத்காரம் டிரைவர் கைது
ஆத்தூர் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:-
தலைவாசல் நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் அருள்குமார் (வயது 28). கார் டிரைவர். இவர் தலைவாசல் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி காரில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை கைது செய்தனர்.