புகார் பெட்டி

புகார் பெட்டி;

Update:2022-04-08 01:36 IST
சாலையோரம் பள்ளம் 
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு சாலையோரத்தில் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும், பள்ளத்தில் யாராவது தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையோரம் உள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                             - அபிலாஸ், நாகர்கோவில். 
காத்திருக்கும் ஆபத்து
மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பஸ் நிறுத்தம் எதிரே பி.எஸ்.என்.எல். தகவல் தொலைதொடர்பு கம்பம் உள்ளது. அந்த கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து மிகவும்  ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த கம்பம் எப்போதும் வேண்டுமானாலும் சாய்ந்து சாலையில் செல்கிறவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே சேதமடைந்த கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                          -மோஸ்லின் பியர்சன், உண்ணாமலைக்கடை. 

பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்கு
ராமவர்மபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு குரங்கு தனியாக சுற்றி வருகிறது. அந்த குரங்கு பொதுமக்களை கடிக்க துரத்துவது, பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்துவது, வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தூக்கி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இந்த குரங்கை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                           -ஜெயராம், ராமவர்மபுரம்.

அடிப்படை வசதி இல்லை
குளச்சலில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சான்றிதழ் பெறுதல் உள்பட தங்களது அன்றாட தேவைகளுக்கு வருகிறார்கள். இவ்வாறும் வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இங்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, ெபாதுமக்கள் நலன்கருதி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                              -அபு தாஹீர், குளச்சல்.

சுகாதார சீர்கேடு 
மேக்காமண்டபம் சந்திப்பில் பல இறைச்சி கடைகள் உள்ளன.  இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மழைநீர் வடிகாலில் கலக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சுகாதார சீர்கேட்டை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                          - ஜெஸ்பின் சார்லஸ்,மேக்காமண்டபம்.

சேதமடைந்த மின்கம்பம்
தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைவிளை முத்தாரம்மன் கோவில் செல்லும் வழியில் 6-44  என்ற எண் கொண்ட மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. காற்று, மழை காலங்களில் மின்கம்பம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                            -விஷ்ணு, சந்தைவிளை. 

மேலும் செய்திகள்