தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் மகாமகக்குளம் அருகில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தலைமை தபால் நிலையத்தில் தபால்துறை சேவைகள் தவிர ஆதார் சேவை மையம், அஞ்சலக அங்காடி மற்றும் பார்சல் சேவை அனைத்தும் சிறப்பாக இயங்கி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தபால் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். வாகனங்களில் வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதி இல்லை. தபால் நிலையத்திற்கு எதிர்புறம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிறு கடை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் ஆட்டோ நிறுத்தும் இடமாகவும் மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-கல்யாணசுந்தரம், கும்பகோணம்.