கரூரில் கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை

கரூரில் கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-04-07 19:08 GMT
கரூர், 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழுவதுமாக குணமடைந்தனர். இதனால் கரூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்தது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்