விபத்தில் என்.எல்.சி.தொழிலாளி பலி
நெய்வேலியில் நடந்த விபத்தில் என்.எல்.சி.தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெய்வேலி,
நெய்வேலி வட்டம்-26 மின்சார வீதி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கட துர்கா பிரசாத் (வயது 51). என்.எல்.சி.யில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நெய்வேலி வட்டம்-17 பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கட துர்கா பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.