மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
தோகைமலை,
தோகைமலை கொசூர் ஊராட்சி நாதிபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவருடைய தாயார் மருதாயி (80). இவர் கடந்த 4-ந் தேதி தோகைமலை- கொசூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று மூதாட்டி மருதாயி மீது மோதினார்.
இதில், படுகாயம் அடைந்த மூதாட்டியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.