கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவு

கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-04-07 18:49 GMT
அரக்கோணம்

ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேற்று அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரவுடிசம், கட்ட பஞ்சாயத்தில் பணம் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வது தொடபாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். 

அப்போது ரவுடி, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும், ரவுடிகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல்கள் தெரிவித்தால் அவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும், ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஆகியோரை தேடி கண்டுபிடிக்கும் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்