கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 92). இவர் தனது வீட்டின் அருகே சைக்கிளில் தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே அதிவேகமாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.