என்ஜினீயர் துக்குப்போட்டு தற்கொலை
என்ஜினீயர் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பாடாலூா்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் முருகேசன்(வயது 28). என்ஜினீயரான இவர் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த முருகேசன் 2 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது அக்காளிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீடடில் இருந்த முருகேசன் திடீரென்று மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முருகேசன் இறப்பதற்கு முன்பு உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று எழுதப்பட்டிருந்தது.