ஒரே குழியில் 10 முதுமக்கள் தாழிகள்
ஒரே குழியில் 10 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.;
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இங்கே ஏற்கனவே 7 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. கீழடியுடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் கடந்த வருடம் பணிகள் நடைபெற்றன. கொந்தகையில் ஏற்கனவே 6, 7-ம் கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளது. தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
கொந்தகையில் கடந்த வாரம் 8-ம் கட்டபணிகள் தொடங்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற இடங்களில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரம் கீழ்புறம் ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் ஒரு அடி ஆழம் தோண்டியபோதே 10 முதுமக்கள் தாழிகள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரியவருகிறது. பணிகள் தொடர்ந்து நடைபெறும் போது இன்னும் கூடுதலாக முதுமக்கள் தாழிகள் கிடைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.