தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்

பண்ணைக்கிணர் ஊராட்சியில் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2022-04-07 18:24 GMT
குடிமங்கலம்
பண்ணைக்கிணர் ஊராட்சியில் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 
தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலம்
குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை ஆகும். இந்த ஓடையின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக சில இடங்களில் தரைமட்ட பாலமும், சில இடங்களில் உயர்மட்ட பாலமும் கட்டப்பட்டு உள்ளன. 
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணைக்கிணர் ஊராட்சியில் உப்பாறு ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த விளை பொருட்களை பாலத்தின் வழியாக கொண்டு செல்கின்றனர். ஆனால் இந்த பாலத்தில் தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது
விபத்து அபாயம்
இந்த தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் இந்தபாலம வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. அத்துடன் எதிர்எதிரே வாகனங்கள் வரும்போது விலகி செல்வதிலும் சிரமம் உள்ளது. இதனால் பொதுமக்கள், விளை பொருட்கள் கொண்டு வரும் விவசாயிகள் எப்போதும் ஒரு வித அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்துசெல்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக இந்த பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்