மொபட்டில் மதுபாட்டில்கள் எடுத்து சென்றவர் கைது
மொபட்டில் மதுபாட்டில்கள் எடுத்து சென்றவர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் நேற்று இடையார் பிரிவு சாலையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையார் சாலையில் இருந்து மொபட்டில் வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பொட்டக்கொல்லை தெற்கு தெருவைச் சேர்ந்த அன்புமணி(வயது 51) என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய மொபட்டில் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அன்புமணியை கைது செய்து, அவர் ஓட்டி வந்த மொபட் மற்றும் 284 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.