விராலிமலை அருகே கிணற்றில் மூழ்கி பெண் சாவு

கிணற்றில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-07 18:02 GMT
விராலிமலை:
விராலிமலை தாலுகா வானதிராயன்பட்டியை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது 30). திருமணமாகாதவர். இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளித்து விட்டு வருவதாக அவரது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் துவைத்த துணிகளை மேலே வந்து காய வைத்து விட்டு மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி குளிக்க சென்றபோது நீரில் தவறி விழுந்துள்ளார். நீண்டநேரம் ஆகியும் போதும்பொண்ணு வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கிணற்றில் வந்து பார்த்தபோது காய வைக்கப்பட்ட துணிகள் மட்டும் இருந்த நிலையில் போதும்பொண்ணு அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுட்டனர். அப்போது போதும்பொண்ணு கிணற்றின் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்ட தீயணைப்பு வீரர்கள் போதும்பொண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போதும்பொண்ணுவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்