தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

சின்னமனூர் அருகே தொழிலாளி வீட்டில் நகைகளை திருடிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-07 17:56 GMT
சின்னமனூர்: 


சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. கூலித்தொழிலாளி. இவரது மகள் ரெஜினா (வயது 39). இவர் வந்தவாசியில் வசித்து வருகிறார். அவர், மார்க்கையன்கோட்டையில் உள்ள பேச்சியம்மன் கோவில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளைச்சாமி குடும்பத்துடன் கோவில் திருவிழாவை காண சென்றார். 

அப்போது வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.  ரெஜினா ஊருக்கு செல்வதற்கு புறப்பட்டார். அப்போது பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்றார். ஆனால் பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூர் போலீசில் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டை பூட்டி விட்டு, அவர்கள் சாவியை வைத்ததை மர்ம நபர்கள் நோட்டமிட்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்