கல்லல் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
கல்லல் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது
காரைக்குடி,
கல்லல் இந்திரா நகரை சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி சோபியா (வயது 45). இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சோபியாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட சோபியா சங்கிலியை பிடித்து கொண்டார். இருப்பினும் சங்கிலி அறுந்து ¾ பவுன் அந்த நபர்களிடம் சிக்கியது. 6¼ பவுன் சோபியாவிடம் இருந்தது. இதையடுத்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.