கறம்பக்குடியில் தொழிலாளர்களுக்கு சலவை பெட்டி வழங்கல்
தொழிலாளர்களுக்கு சலவை பெட்டி வழங்கப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், இலவச சலவை பெட்டி வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன் கலந்து கொண்டு 23 தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், பேரூராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.