சிறுவனுக்கு பாலியல் தொல்லை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-07 17:47 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் 10-வது வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி வந்துள்ளார். ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் வந்தபோது பஸ்சில் முதியவர் ஒருவர் ஏறி சிறுவன் அருகில் அமர்ந்துள்ளார். பின்னர் அந்த முதியவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இதுகுறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கீழக்கரை சகுபர்ஜமாலுதீன் (வயது 57) என்பதும் ராமநாதபுரத்தில் கைலி வியாபாரம் செய்பவர் என்பதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்