பிராந்தகம் ஆறுமுகர் கோவில் கலசபூஜை

பிராந்தகம் ஆறுமுகர் கோவில் கலசபூஜை

Update: 2022-04-07 17:44 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பிராந்தகத்தில் உள்ள 34½ அடி உயரம் கொண்ட ஆறுமுகர் கோவில் திருக்கல்யாணம், மணி சாமி குருபூஜை மற்றும் கலசபூஜை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி  தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோ பூஜை, 108 திருவிளக்கு பூஜை, ஆன்மீக கலை நிகழ்ச்சி நடந்தது. 
விழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் யாக வேள்வி, 108 கலச பூஜை, வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக கடவுளுக்கு திருக்கல்யாணமும், மணி சாமிகளுக்கு குரு பூஜை விழாவும் நடைபெற்றது. விழாவையொட்டி வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகக்கடவுள் மற்றும் மணி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் பிராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பிராந்தகம் ஆறுமுக கடவுள் கோவில் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் பிராந்தக காவடி குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்