வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

வீரபாண்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-04-07 17:35 GMT
தேனி : 

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள பகுதி மற்றும் நெடுஞ்சாலை ஓரத்திலும் 37 சாலையோர கடைகள் உள்ளன. நேற்று வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து இருந்த கடைகளை அகற்றினர். கோவில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் சாலையோர கடைகள் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுக நயினார் மற்றும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதர் ஆகியோர் அங்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேரூராட்சி அலுவலகம் முன்பு அவர்கள் சிறிது நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றனர். 

மேலும் செய்திகள்