விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

இளையான்குடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-04-07 17:34 GMT
இளையான்குடி, 
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென் கடுக்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் வினோத் (வயது 23). இவர் பி.எஸ்சி. மற்றும் ஐ.டி. முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் விேனாத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்