தேவகோட்டையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
தேவகோட்டையில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது
தேவகோட்டை,
தேவகோட்டை கார்ப்பரேஷன் வீதியில் வசித்து வருபவர் உடையப்பன். இவரது மனைவி ராசாத்தி (வயது 43). சம்பவத்தன்று மதியம் இவர் தேவகோட்டை மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் ராசாத்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
அதன் பின்னர் இதே வாலிபர்கள் ரெகுநாதபுரம் கிழக்கு தெருவில் வசித்து வரும் சுப்பையா மனைவி ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் அந்த வாலிபர்களுடன் ஜெயந்தி போராடி சங்கிலியை காப்பாற்ற முயன்றார். இருப்பினும் சிறிய அளவிலான சங்கிலியை அந்த வாலிபர்கள் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து தேவகோட்டை டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.