பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பு
கோட்டை வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மர்ம நபர்கள்தீ வைத்தனர்.;
வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் எதிரே கோட்டை வளாகத்தில் அகழி கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நேற்று மாலை அந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.