பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

கோவையில் பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-07 17:29 GMT
கோவை

கோவை விளாங்குறிச்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரகு (வயது 40). இவருடைய மகள் நாகேஸ்வரி (17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளி முடிந்து மாலை 6 மணிக்கு நாகேஸ்வரி வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர். 

இதில் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்கு சென்று, அன்று இரவு சாணி பவுடரை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு, தனது சகோதரிக்கு போன் செய்து தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அவர், நாகேஸ்வரி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த நாகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்