ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2022-04-07 17:28 GMT
கோவை

கோவை பீளமேடு நேருநகர் ராஜகோபால் வீதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். 

இதனால் யுவராஜ் தனது மனைவியுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 26-ந் தேதி சொந்த ஊரான ஈரோட்டில் நடந்த கோவில் திருவிழாவுக்கு மனைவியுடன் சென்றார். பின்னர் 4-ந் தேதி வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 3 தங்க மூக்குத்தி, ரூ.3 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

யுவராஜ் வீட்டில் கண்காணிப்பு கேமரா மாட்டியிருந்தார். இதை அறிந்த திருடர்கள் கண்காணிப்பு கேமரா பதிவு செய்யும் ஹார்ட்டிஸ்கை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்