வரதட்சணை கொடுமை. என்ஜினீயர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

வரதட்சணை கொடுமை காரணமாக என்ஜினீயர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-07 17:22 GMT
வேலூர்

வேலூரை அடுத்த கத்தாழம்பட்டு காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது 32). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அணைக்கட்டை அடுத்த கெங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் 2020-ம் ஆண்டு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது பெண்ணுக்கு தங்க நகைகள், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் சீதனமாக வழங்கியதாக தெரிகிறது.

இந்தநிலையில் தனலட்சுமியை அவரது கணவர் மற்றும் மாமனார் தயாளன், மாமியார் ஜோதி உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதலாக புதிய வீடு ஒன்றை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியும், அவரை தாக்கி மற்றும் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனலட்சுமி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனலட்சுமியின் கணவர் பூபாலன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்