டிராக்டர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பலி

கச்சிராயப்பாளையம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2022-04-07 16:49 GMT
கச்சிராயப்பாளையம், ஏப்.8-

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள க.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அல்லி முத்து மகன் அலெக்ஸ்பாண்டியன்(வயது 24). டிராக்டர் டிரைவர். இவர் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். பிறகு டிராக்டரை எடுத்துக்கொண்டு பக்கத்து நிலத்திற்கு சென்றபோது நிலை தடுமாறி அலெக்ஸ் பாண்டியன் கீழே விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். 

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அலெக்ஸ் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்