மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ரிஷிவந்தியம்,
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் ரிஷிவந்தியம் வட்டார வள மையத்தில் வருகிற 11-ந்தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் பகண்டை கூட்டுரோடு மும்முனை சந்திப்பில் நடைபெற்றது. ஊர்வலத்தை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன், சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலமானது பகண்டை கூட்டுரோடு முனை சந்திப்பில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரிய பயிற்றுனர்கள் வட்டார கணக்காளர் பாலகிருஷ்ணன், வட்டார பொருளாளர் மகேந்திரன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப் அந்தோணி, பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.