சாலை விபத்தில் தொழிலாளி பலி

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2022-04-07 16:29 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக தனது மோட்டாா் சைக்கிளில் அருகே உள்ள கிளியூர் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அருகில் உள்ள வளைவில் திரும்பியபோது, ஏழுமலையின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியது. 

இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்