கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-07 16:20 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை திருச்சி ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து வந்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் சுமார் 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த சுகுமார்(வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுகுமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் கூத்தனூரில் திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா வைத்துக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த வீராசாமி மகன் தனுஷ்(19) என்பவரை எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்