தூத்துக்குடியில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
கர்ப்பிணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (வயது 25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் லட்சுமி பிரியா (21) என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் பாரதிநகரில் வசித்து வந்தனர். தற்போது லட்சுமி பிரியா கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமி பிரியா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 5 மாதங்களில் லட்சுமி பிரியா இறந்து உள்ளதால், இதுகுறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.
--------