திருட்டு வழக்கில் வாலிபர் கைது
பெங்களூருவில் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அந்த வீட்டில் இருந்து தங்கநகைகளை திருடி சென்று இருந்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் வீடு புகுந்து நகைகளை திருடியதாக நவீன்குமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனர். கைதான நவீன்குமார், வீட்டு உரிமையாளருக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.