சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது.
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து பூச்சொரிதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள் நீராட்டு விழா வருகிற 15-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.