பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர தயாா்; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர தயாா் என டி.கே.சிவக்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-04-07 15:22 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி கட்சி தாவும் நடவடிக்கைகளில் தற்போதில் இருந்தே சில எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எந்த நேரத்திலும் எதிர் கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. இதற்காக கட்சியை வளர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. நான் ஏற்கனவே கூறியபடி காங்கிரசில் சேர விருப்பம் உள்ளவர்கள், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கும்படி கூறி இருந்தேன். தற்போது சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு காங்கிரசில் சேர தயாராக இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. காங்கிரசில் சேரும் போது, நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்