மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள சூடாமணிபட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 26). வேன் டிரைவர். அவர் உறவினரான 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்தநிலையில் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி முனியப்பன் அவரை கர்ப்பிணியாக்கினார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தாடிக்கொம்பு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் முனியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் முகமது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
------