காளிப்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
காளிப்பட்டி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
மல்லசமுத்திரம்:
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி நெசவாளர் காலனி கற்பக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை, நவக்கிரகங்கள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், 5-ம் தேதி மங்கல பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் மற்றும் கோபுர கலசம் வைக்கப்பட்டது. பின்னர் மங்கள இசை, ஆனைமுகன் வழிபாடு, முதல் கால யாக வேள்வி நடந்தது.
நேற்று முன்தினம் 2-ம் கால யாக வேள்வி மற்றும் தீபாராதனை வழிபாடும், வலம்புரி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கற்பக விநாயகர் குழு மற்றும் காளிப்பட்டி நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்..