ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்;
பந்தலூர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே முருக்கம்பாடி ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு வந்த கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, ஆதிவாசி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இனிப்புகள் வழங்கியதோடு 38 குடும்பங்களுக்கு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசும்போது, ஆதிவாசி மக்களுக்கு போலீசார் சார்பில் பல்வேறு உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது. குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். அவர்கள் அரசு வேலைகளில் சேர்ந்து, உயர் பதவிகளை அடைய வேண்டும்.
குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டும். எந்த குறையாக இருந்தாலும், போலீசாரிடம் தெரிவித்தால், உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றார். இதில் கூடுதல் சூப்பிரண்டுகள் முத்துமாணிக்கம், மோகன்நிவாஸ், தேவாலா துணை சூப்பிரண்டு ராமலிங்கம், சேரம்பாடி இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.