கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை முயற்சி, கொலைமிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-04-07 13:33 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, கொலைமிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சி
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் சேர்மராஜ். இவருடைய மகன் சக்திவேல் என்ற சக்தி (வயது 23). இவரை தென்பாகம் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
இதே போன்று ஆறுமுகநேரி ராஜமணியபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் மகன் முத்துராஜ் (27) என்பவரை கொலை மிரட்டல் வழக்கில் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சக்திவேல் என்ற சக்தி, முத்துராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

மேலும் செய்திகள்