ஆன்லைனில் ஒயின் வாங்கிய பெண்ணிடம் ரூ.4¾ லட்சம் அபேஸ்
ஆன்லைனியில் ஒயின் வாங்கிய தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் ரூ.4¾ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.
மும்பை,
ஆன்லைனியில் ஒயின் வாங்கிய தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் ரூ.4¾ லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.
ஆன்லைனில் மது
மும்பை பவாய் பகுதியில் 32 வயது தனியார் நிறுவன பெண் அதிகாரி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று உறவினருடன் ஒயின் மதுபானம் குடிக்க விரும்பினார். எனவே அவர் ஆன்லைனில் ஒரு மதுபான கடையின் போன் எண்ணை எடுத்து, அதை தொடர்பு கொண்டு பேசினார். மேலும் மதுபானத்திற்கு ஆன்லைன் மூலம் ரூ.650 செலுத்தினார்.
இந்தநிலையில் மதுபான கடையில் இருந்து பேசுவதாக பிரதீப் குமார் என்ற நபர் பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பெண் மதுபானத்திற்கு ரூ.620 செலுத்துவதற்கு பதிலாக ரூ.650 அனுப்பிவிட்டதாக கூறினார். மேலும் கூடுதலாக செலுத்திய ரூ.30-ஐ திருப்பி தருவதாக கூறினார்.
ரூ.4¾ லட்சம் அபேஸ்
இதற்காக அந்த நபர் பெண்ணுக்கு கியு.ஆர். கோடு ஒன்றை அனுப்பினார். இந்த கியு.ஆர் கோடை ஸ்கேன் செய்த போது பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரத்து 991 எடுக்கப்பட்டது. இதுகுறித்து பெண், அந்த நபரிடம் கேட்ட போது கியு.ஆர். கோடில் தவறு நடந்துவிட்டதாக கூறினார். பின்னர் மீண்டும் ஒரு கியு.ஆர். கோடை அனுப்பினார். இவ்வாறு அந்த நபர் அனுப்பிய 6 கியு.ஆர். கோடுகளை பெண் ஸ்கேன் செய்தார்.
இதன் காரணமாக அவர் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. மிகவும் தாமதமாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் சம்பவம் குறித்து பவாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.