அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் பூப்பல்லக்கில் ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் பூப்பல்லக்கில் ஊர்வலம்
கொடைரோடு:
அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளாக இடையபட்டி கோனார்கள் மண்டகபடி சார்பில் அம்மன் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 9-வது நாள் கன்னடியர்கள் மண்டகபடி சார்பில் அம்மன் பூப்பல்லக்கில் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு பூஜை செய்தனர்.
விழாவையொட்டி கோவிலில் மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், பால்குடம், சந்தன குடம் எடுத்தல் என பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை குழு தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் காசிப்பாண்டி, பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கமிட்டியினர், பொதுமக்கள் செய்து இருந்தனர்.