பிளஸ்-2 மாணவர் தற்கொலை
செங்கோட்டையில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டை:
செங்கோட்டை ஆசிரியர் வேலாயுதம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது 18). இவர் செங்கோட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 2 மாதங்களாக சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் பள்ளிக்கு சென்ற பாலசுப்பிரமணியனிடம், அவரது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் கடந்த 28-ந்தேதி எலியைக் கொல்ல பயன்படுத்தும் விஷ பிஸ்கட்டை தின்றார். இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய அவருக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செங்கோட்டையில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.