சிமெண்டு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு

பழவூர் அருகே சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-04-07 03:45 IST
நெல்லை:
நெல்லை மாவட்டம் தெற்கு விஜயநாராயணத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மகன் மாணிக்கம் (வயது 21). டிரைவர். இவர் அரியலூரில் இருந்து லாரியில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, அஞ்சுகிராமம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு புண்ணார்குளம் விலக்கில் உள்ள திருப்பத்தில் வந்தபோது, திடீரென லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் மற்றும் வள்ளியூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாணிக்கம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்